Friday 29 April 2011

விடுதலை புலிகளும் நானும்


எனது சிறுவயதில், நான், என் அக்கா, எங்கள் தோழிகள் இருவர் என ஒரு குட்டி ஊர்வலமாக ஸ்கூல் க்கு சென்று வருவோம். ஒரு 15 நிமிட நடை பயணம். அதை நாங்கள் 1 /2 மணி நேரம் நடப்போம். வீடு செல்லும் வழி நெடுக, பெரிய தூண்களும், பெரிய திண்ணையும், கொண்ட வீடுகள் நிறைந்திருக்கும் . முடிந்தவரை எல்லா திண்ணையிலும் ஏறி எறங்கி விளையாடிகொண்டே வீடு செல்வோம். 

ஒரு முறை, அது போல் நடந்து போய் கொண்டிருந்தோம். திடீரென சில சைக்கிள்கள் எங்களை வளைத்து பிடித்தன . நாங்கள் பயந்து உறைந்து நிற்க., எங்களை கடத்தி கொண்டு சென்றுவிட்டார்கள் (!) அந்த இளைய்ந்கர்கள் . ஒரு பெரிய திண்ணை வீட்டில் எங்களை இறக்கி விட்டு , உள்ளே வருமாறு அழைத்தர்கள் புன்முறுவலோடு எங்கள் பயத்தை ரசித்து கொண்டே. எங்கள் நால்வருக்கும், கொஞ்சம் தைரியம் வந்து விட்டது . ஏனெனில் அந்த வீடு நாங்கள் வீடு செல்லும் வழியில் உள்ள வீடு. ஆனாலும் உள்ளே செல்ல வில்லை. அவர்கள் சாக்லேட் கொடுத்தார்கள். அதோடு நாங்கள் வந்து விட்டோம். 

ஆனால் தினசரி அவர்கள் (4-5 பேர் ) பள்ளி விடும் நேரம் என்கல்லுக்காக வாசலிலே காத்து கொண்டிருப்பார்கள். இலங்கை தமிழில் கொஞ்சுவார்கள். நாங்களும்  அந்த வீடிற்கு செல்ல தொடங்கினோம், ஒரு காலேண்டர் கொடுத்தார்கள் , பிரபாகரன் போட்டோ போட்ட காலேண்டர். (அதை என் மாமா ரொம்ப நல்ல இருக்குன்று எடுத்து சென்று விட்டார் ).

சில மாதங்கள் பிறகு அந்த வீடு பூட்டியே கிடந்தது . அதன் பிறகு அவர்களை பார்க்கவே  இல்லை. எங்கள்  தெருவில் சிலர் சொன்னார்கள் அந்த வீட்டில் இருந்தவர்கள் விடுதலை புலிகள்

No comments:

Post a Comment