Tuesday 5 April 2011

Eela Porali

2006 இல் மூதூர் வரையும்,அதன் பின்னர் யாழ்ப்பாணம் மண்கும்பான் வரையும் சென்று திடீர் என திரும்பி வந்தனர் எமது போராளிகள். அப்போது ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்.என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்ததுதான்.
ஆம்! இத்தனை வலிமையுடன் இருந்த நமது போராளிகள் இப்படி முடக்கப்பட்டதன் காரணம்?
ஒவ்வொரு தடவையும் நாம் பல இடங்களை கைப்பற்றிய பொழுதெல்லாம் இலங்கை அரசு இந்தியாவுடனும் சில மேற்கு நாடுகளுடனும் சேர்ந்து எமது படைகளை பின்வாங்க செய்தனர்.
இதற்கு இலங்கை அரசு இந்தியாவின் துணையுடன் எம் தலைமையை பணிய வைத்து அந்த நிகழ்வுகளை கச்சிதமாக முடித்து வந்தது. நம் தலைமை அந்த நிர்ப்பந்தத்துக்கு பணிந்ததன் காரணம் மேற்குலகுடன் இணைந்து நம் போராட்டம் பயங்கரவாத போராக திரிபுபடுத்தி அழிக்கப்படும் என இந்தியா கூறிவந்ததுதான்.அதனால் இந்தியாவின் சொல்லை தட்ட முடியாத நிலை.
அதேபோலத்தான் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் சில இடங்களை சிங்களம் பிடித்திருந்த பொழுது இந்தியா, நோர்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடனேயே நமது தரப்பும் செய்தது.
இதன் காரணமாக இராணுவ சமநிலையை இருபகுதியினரும் தக்கவைத்து வந்தனர் .

[குறிப்பு:- ஒட்டுமொத்த நகர்வுகளும் அல்ல. இராணுவ தழர்ச்சி நடைபெற்று வந்த காலத்தில் அதாவது புலிகள் கை ஓங்கி சென்ற காலத்தில் தான் இப்படி நடந்தது].

இப்படி சமநிலையை தக்கவைத்து கொள்வதற்கு எமது மேற்குலக பொறுப்பாளர்கள் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமது அரசியல் வலிமைகளை நன்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நடைமுறையை நம்பித்தான் எமது இறுதி கால நகர்வும் நடந்தது.
மேற்குலகம் அப்போதைய தலைவர்கள் கே.பி,நெடியவன், காஸ்ரோ ஆகியோர் நமது அப்போதைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் சொல்லும் விடையங்களை நம்பி நாம் கழுத்தறுக்கப்பட்டோம் என்பது தான் உண்மை.

ஆம்
யுத்தம் நம்மை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபொழுது முன்னைய போல் இம்முறையும் நடக்கும்,படையினர் பின்வாங்கப்படுவர் என எதிர்பார்த்தோம் நடக்கவில்லை.. இந்தியாவின் பல தலைவர்களையும் நோர்வேயிடமும் கேட்டுப்பர்த்தோம் பதிலேதும் கிடைக்கவில்லை. இதனால் நம் புலம்பெயர் தலைவர்களை குடைந்தெடுத்தார்கள் நம் தலைமைகள் .
ஆனால் அவர்கள்
அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள் .
எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை .
இருந்தும் மறுபடியும் பேசச்சொல்லி வற்புறுத்தப்பட்டது. நாம் அப்பொழுது இருந்த நிலைமையில் நாம் ஒடுக்கப்பட்டு இருந்ததால் இலங்கை அரசு அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டது, உலகுக்கு மக்களை மீட்கும் போர் செய்வதாக சொல்லி எம் இதயம்வரை நகரத்தொடங்கியது.
சடுதியாக மாற்று வழி செய்யச்சொல்லி எமது தலைமை புலம்பெயர் தேசத்தை பணித்தது. இப்பொழுது தான் இந்தியாவின் நகர்வு நேரடியாக நம்மை கால்வாரிவிட்டது
இந்தியாவின் கருணாநிதி அந்த நேரத்தில் தேர்தலை மையமாக கொண்டு நகர்வுகளை செய்தார். அவரது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் செயல் நெறிக்குள் இருந்து செயற்பட தொடங்கியது. இதை நாம் உடனடியாக அறிந்து கொள்ளும் நிலையில் அன்று இருந்திருக்கவில்லை. காரணம் நம் புலனாய்வு தகவல்கள் வெளி நாடுகளில் இருந்து உண்மையானதாக நம்மை வந்து சேரவில்லை.
அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் தழர்ந்த நம் வெளிநாட்டு நகர்வுகள் அண்ணன் தமிழ்ச்செல்வனுடைய இழப்பின் பின் அடியுடன் தொலைந்துவிட்டது என்பது உண்மை. இதனால் தான் நம் புலம்பெயர் நாடுகளின் ஆதரவை ஒருதுளிகூட பெறமுடியாது போனது.
மாற்று வழி செய்வதற்கு நம் புலம்பெயர் தலைமையுடன் இந்தியாவின் கருணாநிதியின் அரசையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிரியார் ஜெகத்காஷ்பாரையும் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தது நம் தலைமை. அப்பொழுது தான் நம்பியார் கனிமொழி பாதிரியார் என எல்லோரும் மாற்று வழி செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தனர்,
இந்த நிலையில் நம் போராளிகளையும் மக்களையும் காப்பற்ற வேண்டும் என நம் தலைமை எமது நிலைப்பாட்டை முன்வைத்தது.

2 comments:

  1. naam paesi enna payan. Anaithum mudinthu poai vittathae. eninum oru vazhi mattumae innum undu.

    Anaal intha pathivu unathu sontha pathivalla endrae thoandrugirathu thoazhi...

    Eninum.........

    ReplyDelete
  2. தலைப்பு மட்டும் தங்கிலிஷில் ஏன்? :-). இருந்தாலும், உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

    ReplyDelete